785 Views
IN COLLECTIONS
Folkscanomy: General Academic PapersUploaded by Maheswari Publishers (The publishing unit of PANDIAN EDUCATIONAL TRUST) on
We will keep fighting for all libraries - stand with us!
தமிழ்மொழி மற்றும் இலக்கியத்திற்காக எமது தமிழ்மொழி மற்றும் இலக்கிய பன்னாட்டு ஆய்விதழ் (Ijtlls) தம் இலக்கிய மற்றும் ஆராய்ச்சி அரும்பணியைச் செய்து வருகின்றது. தொல்லியல் சான்றும் தமிழர் பண்பாடும் என்ற பொருண்மையில் கருத்தரங்கம் நடத்த அனுமதி தந்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் கோ.விசயராகவன் மற்றும் முனைவர் நா.சுலோசனா ஆகியோர்க்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன். இப்பன்னாட்டு கருத்தரங்கத்தின் ஓர் அங்கமாக தமிழ்மொழி மற்றும் இலக்கிய பன்னாட்டு ஆய்விதழ் செம்மையாய் செயல்பட்டு ஆய்வாளர்களின் அனைத்து கட்டுரைகளும் ஆய்வு நெறிமுறைகளின்படி தணிக்கைச் செய்யப்பட்டு மதிப்புரை வழங்கி செம்மைப்படுத்தி இணையத்தில் பதிப்பு செய்து உள்ளது. எதிர்காலத்தில் தமிழ் ஆராய்ச்சிகளை உலக அரங்கத்திற்கு எடுத்துச் செல்ல ஓர் ஆய்வுக்களமாக எமது இதழ் செயல்பட்டு வருகிறது. பன்னாட்டு கருத்தரங்கில் தமது ஆய்வைச் செம்மை நிறுத்தி தமிழ்மொழி, தமிழர் நாகரிகம், தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரம் போன்ற பொருண்மையில் நடந்த அகழ்வாராய்ச்சிகள் மூலமாக கிடைத்த தரவுகள் கட்டுரைகளை வழங்கி சிறப்பித்த தமிழ்ப் பேராசிரியர்கள், ஏனைய அனைத்து துறைப் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களை மனதார பாராட்டுகிறோம். அதற்கு தமது உறுதுணை அளித்த அனைவருக்கும் நன்றி.
785 Views
Uploaded by Maheswari Publishers (The publishing unit of PANDIAN EDUCATIONAL TRUST) on